புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதைகளை மையப்படுத்தி வெளியானது. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' எனும் படம் தோல்வியை தழுவியது. இதன் பிறகு எந்தவொரு முன்னணி நடிகரும் இவருக்கு வாய்ப்பு தரவில்லை.
தற்போது முத்தையா அவரது மகனை வைத்து 'சுள்ளான் சேது' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து முத்தையா புதிதாக ஒரு படம் ஒன்றை தயாரிக்கின்றார். இதில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்கிறார்கள். ஆனால், இந்த படத்தின் இயக்குனர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.