பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

சின்னத்திரை நடிகையான ஜெனிப்ரியா வாணி ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி, சில தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார்.
சொந்தமாக ப்யூட்டி பார்லர் வைத்திருக்கும் ஜெனி ப்ரியாவுக்கு சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இப்போதே 100 சவரன் நகை வேண்டுமென கேட்க, ஜெனிப்ரியா முதலில் 50 சவரன் நகையை மட்டும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜெனிப்ரியாவை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டாரின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு ஜெனிப்ரியா வந்துள்ளார்.
அப்போது அவர் கொடுத்த பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார் 50 சவரன் நகை பற்றி கேட்டால் அப்படி எதுவுமே தங்களிடம் கொடுக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியான ஜெனிப்ரியா தற்போது துநேசன் மற்றும் குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.