இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரதர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை யமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பிரதர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு இளைஞன் வேலைக்கும் செல்லாது சுற்றிக் கொண்டிருப்பதால் குடும்பத்தைச் சார்ந்தவர்களால் அவமதிக்கப்படுகிறார். இந்த அவமானங்களை எல்லாம் மீறி அந்த இளைஞன் எப்படி தனது வாழ்வில் முன்னேறுகிறான் என்பது போன்ற காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது. வேலையில்லாமல் சுற்றிக் கொண்டு காதலிப்பது, அப்பாவிடம் திட்டு வாங்குவது, அக்கா, மாமாவால் அவமதிக்கப்படுவது போன்ற காட்சிகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி. அந்த வகையில் இந்த பிரதமர் படம் ஒரு இளைஞன் அவனை சுற்றிய குடும்பம் காதல் போன்ற பின்னணியில் உருவாகி இருக்கிறது.