இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது படக்குழு தீவிர புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாவதால் ஐதராபாத், டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் சூர்யா.
இந்நிலையில், ஐதராபாத்தில் கங்குவா படத்தின் புரமோஷனில் ஈடுபட்ட சூர்யா, இயக்குனர் சிவா ஆகிய இருவரும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜூனா தெலுங்கில் பேசுமாறு சூர்யாவிடம் கூறினார். அதற்கு நான் தெலுங்கில் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவேன். என்னைவிட என் தம்பி கார்த்தி ரொம்ப நன்றாக தெலுங்கு பேசுவார். தன்னுடன் பணியாற்றும் தெலுங்கு நடிகர்களுடன் அவர் தெலுங்கில்தான் பேசுவார். குறுகிய காலத்தில் என் தம்பி தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டதை பார்த்து பொறாமையாக உள்ளது. அதனால் நானும் சீக்கிரமே தெலுங்கு கற்றுக் கொண்டு என் தம்பியை போல சரளமாக தெலுங்கு பேசுவேன் என்று கூறினார் சூர்யா.