ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
சமூக வலைத்தளங்களில் நடிகைகள் அடிக்கடி புகைப்படங்களைப் பகிர்வது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், திடீரென சில கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பார்கள். அப்படியானவர்களில் அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுப்பர் நடிகை ஜான்வி கபூர். அவரது அம்மா மறைந்த நடிகை ஸ்ரீதேவி கூட இப்படியெல்லாம் கிளாமர் காட்டியதில்லை.
ஜான்வி கபூரின் சில புகைப்படங்கள் கிளாமர் என்பதைவும் மீறி கவர்ச்சி என்ற எல்லையில் நிற்கும். ஜான்வியும் அவரது தங்கை குஷியும் நேற்று ஒரு தங்களது முதுகு பகுதி மட்டும் தெரியும்படியான இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்கள். பிகினி உடை அணிந்து எடுத்த புகைப்படம் என்பது பார்க்கும் போதே தெரியும்.
புகைப்படங்களைப் பதிவிட்ட பதினைந்து மணி நேரத்திற்குள்ளாகவே அதற்கு பத்து லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. இன்ஸ்டா தளத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்துள்ளார் ஜான்வி.