கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனன்யா. அதன்பிறகு தமிழில் தனக்கேற்ற படங்களே கிடைக்கவில்லை என்றொரு புகாரை சொல்லிக்கொண்டு மலையாள படங்களில் நடித்தவரை சீடன் படத்துக்காக மீண்டும் கொண்டு வந்தார் திருடா திருடி சுப்பிரமணியசிவா. அதைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்த அனன்யா பின்னர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொல்லிவிட்டு சென்றார்.
கேரளாவைச்சேர்ந்த பைனான்சியர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் அனன்யாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று சொல்லி அவர் மீது அனன்யா பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆனால், சில மாதங்களுக்குப்பிறகு மீண்டும் ஆஞ்சநேயனையே திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் அனன்யா.
இந்த நிலையில், பின்னர் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், இப்போது விமல், பிரசன்னா இணைந்து நடிக்கும் புலிவால் படத்தில் நடிக்கிறார். இதே படத்தில் ஓவியா, இனியா போன்ற நடிகைகளும் இருந்தாலும் அனன்யாவின் நடிப்பாற்றலைக் கருத்தில் கொண்டு முக்கிய வேடம் தரப்பட்டுள்ளதாம்.