கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர கமல் தயாரிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக தயாராகி வந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் பிரச்னையால் இந்தப்படம் துவங்க தாமதம் ஆகி உள்ளது. இதனால் மற்ற படங்களில் நடிக்க சிம்பு தயாராகி வருகிறார்.
இதற்கிடையே ‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் பிரபலமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் நடிப்பதாக எக்ஸ் தளத்தில் சிம்பு அறிவித்துள்ளார். அதன் உடன் கட்டம் கட்டி கலக்குறோம்... வின்டேஜ் எஸ்டிஆர் மூட் என குறிப்பிட்டு தனது பாதி முகம் தெரியும் அளவுக்கு கை விரலில் கட்டம் கட்டி இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இரு தினங்களாக எக்ஸ் தளத்தில் சிம்பு, ‛‛Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT!!! என்றும், டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூடில் நாளைக்கு சார்ப்பா மாலை 6.06 மணிக்கு வரேன்'' என குறிப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‛டிராகன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.