ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‛விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் இப்படத்தில் நடித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரீ-ரிலீஸ் என்ற ஒரு கலாச்சாரம் தமிழ் சினிமாவில் வந்தது. அப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதலர் தினத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரீ-ரிலீஸ் ஆனது.
சென்னையில் உள்ள வி.ஆர்.மால், பிவிஆர் திரையரங்கில் காலை காட்சியாக மட்டும் இப்படம் தற்போது ஆயிரம் நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ரீ-ரிலீசில் வெளியான ஒரு திரைப்படம் இத்தனை நாட்கள் ஓடியது திரை உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்திற்கு மூன்று ஆண்டுகளாக இளைஞர்களும், கல்லூரி மாணவ, மாணவியரும் தொடர்ந்து வந்து படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பல நாட்களில் இத்திரைப்படம் வசூல் காட்சிகள் ஆகவும் ஓடி இருக்கிறது.
ஏஆர் ரஹ்மான் இசையில் இனிமையான பாடல்களும், சிம்பு, திரிஷாவின் அழகான காதல் நடிப்பும் இப்படத்தை இன்றளவும் ரசிகர்களை ரசிக்க வைப்பதில் காரணமாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற வரலாற்றை ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் தான் வைத்திருந்தது. அப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் 800 நாட்களுக்கு மேல் ஓடியது. இருந்தாலும் ரீ-ரிலீஸில் ஒரு படம் ஆயிரம் நாட்களை கடந்து ஓடியது சாதாரண விஷயம் அல்ல என்று திரையுலகினரும், சிம்பு ரசிகர்களும் கருதுகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான காதல் திரைப்படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.