‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல இளம் மற்றும் முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட காஜல் அகர்வால் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி செலவிட்டு வருகிறார். சமீபத்தில் பயணம் மேற்கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்திருந்தார் காஜல் அகர்வால்.
தற்போது கிட்டத்தட்ட மும்பைவாசியாகவே மாறிவிட்ட நடிகர் சூர்யாவும் சென்னை திரும்புவதற்காக அதே சமயத்தில் விமான நிலையம் வந்துள்ளார். அங்கே இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். காஜல் மற்றும் அவரது கணவருடன் சில நிமிடம் சூர்யா பேசினார். பிறகு அவர்கள் தங்களது பயணத்திற்காக கிளம்பிச் சென்றனர்.
கடந்த 2012ல் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான மாற்றான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.