ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

லோகேஷ் அஜில்ஸ் என்பவர் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியாஹரி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'லெவன்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் புலனாய்வு திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. மேலும், டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்காக 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' என்று தொடங்கும் ஒரு பாடலை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறார் இப்படத்தின் இயக்குனராக உள்ள லோகேஷ் அகில்ஸ்.
ஸ்ருதிஹாசன் பின்னணி பாடியுள்ள இந்த பாடலை கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார். கதைப்படி இந்த பாடல் ஹீரோ மற்றும் வில்லன் குறித்த பின்னணியை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இந்த 'லெவன்' படத்தை வரும் நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.