விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

சென்னையில் உள்ள பிரபலமான தியேட்டர்களில் ஒன்று அசோக் நகரில், அசோக் பில்லர் அருகில் இருக்கும் உதயம் தியேட்டர். 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்தத் தியேட்டர் சுமார் 41 வருடங்களுக்குப் பிறகு மூடப்பட உள்ளது.
உதயம், சூரியன், சந்திரன் பின்னர் மினி உதயம் என நான்கு தியேட்டர்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. நாளை வெளியாக உள்ள ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படம்தான் அத்தியேட்டர் வளாகத்தில் வெளியாக உள்ள கடைசி படம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு தியேட்டரை மூட உள்ளார்களாம்.
இத்தியேட்டர் மூடப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. சில டாகுமென்ட் வேலைகள் தாமதமானதல் அதுவரையில் தியேட்டரை நடத்த முடிவு செய்து தற்போது வரை நடத்தி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'சிவப்பு சூரியன்' தான் அங்கு திரையிடப்பட்ட முதல் படம். நாளை வெளியாக உள்ள ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்துடன் தியேட்டர் மூடப்படுவது ஒரு அதிசய ஒற்றுமை.
அடுக்குமாடி குயிருப்பு நிறுவனம் ஒன்று வீடுகளைக் கட்ட இத்தியேட்டர் வளாகத்தை வாங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் கட்டுமானப்பணி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.