கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சிட்டி லைட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள படம் '2கே லவ் ஸ்டோரி'. சுசீந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெகவீர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் அறிமுக விழா நடந்தது. புதுமுகம் ஜெகவீரை ராமராஜன் அறிமுகப்படுத்தினார். விழாவில் சுசீந்திரன் பேசுகையில், ''2கே லவ் ஸ்டோரி' என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம். 'வெண்ணிலா கபடி குழு' படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விஷயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச் செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர் ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படிக் கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார்.
யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல்தான் 'வெண்ணிலா கபடி குழு' படத்தை ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படத்திற்கும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறையப் புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். நிறைய ஜாலி இருக்கிற படமாக இப்படம் இருக்கும். 'பிரேமலு' மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும்.
'பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்பிடன்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்பிடன்டாக சொல்லிக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார்,'' என்றார்.