ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அறிமுக இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'மகாராஜா'. விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, அபிராமி, நட்ராஜ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். தியேட்டர்களில் 50 நாட்கள் வரை ஓடிய இந்த படம் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள இந்த படம் அந்த நிறுவனத்திற்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை நேற்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினார்கள். படத்தில் பணியாற்றியவர்கள், நடிகர், நடிகைகள் இதில் கலந்து கொண்டனர். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதன் ஹைலைட்டாக இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு 'பி.எம்.டபிள்யூ' சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் விஜய்சேதுபதி இணைந்து இதனை வழங்கினர்.