2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஒரே படத்தில் பல இசை அமைப்பாளர்கள் பணியாற்றுவது அபூர்வமாக நடக்கிற ஒரு விஷயம். அப்படி ஒரு படம் 'கண்ணில் தெரியும் கதைகள்'. 1980ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சரத்பாபு, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி எம்.என்.ராஜம், விஜயகுமார், விஜயசந்திரிகா உள்பட பலர் நடித்திருந்தனர். தேவராஜ் மற்றும் மோகன் இயக்கி இருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் தயாரித்திருந்தார்.
கொடூரமான ஒரு பண்ணையாருக்கும் ஒரு ஏழை சிறுவனுக்குமான மோதல்தான் கதை. பண்ணையாரால் துரத்தப்படும் சிறுவன் நகரத்திற்கு வந்து படித்து ஆளாகி மீண்டும் கிராமத்திற்கு சென்று பண்ணையாரை பழிவாங்கும் கதை.
இந்த படத்திற்கு இளையராஜா, சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியர் என 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர், அவர் தயாரிக்கும் படம் என்பதாலும், தேவராஜ் - மோகன் அனைவருக்கும் பிடித்த இயக்குனர்கள் என்பதாலும் 5 இசை அமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்தனர்.
எல்லா பாடல்களுமே ஹிட்டானது. குறிப்பாக இளையராஜா இசையமைத்த “நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இளமை இது புதுமை...” என்ற பாடல் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது.