'கங்குவா' பட வழக்கு முடிவு : படம் திட்டமிட்டபடி வரும்... | தமிழில் அறிமுகமாகும் கயாடு லோஹர் | நவ.29ம் தேதி திரைக்கு வரும் சித்தார்த்தின் ‛மிஸ் யூ' | மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் புதிய கூட்டணி? | ''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ் | பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் |
ராம்கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜூனா, அமலா மற்றும் பலர் நடிப்பில் 1989ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'சிவா'. அந்தக் காலத்தில் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம். காதல், ரவுடியிசம் என ஒரு புதிய பாணியிலான படத்தைக் கொடுத்தார் இயக்குனர் வர்மா.
அப்போதைய ஒன்று பட்ட ஆந்திராவில் 22 சென்டர்களில் 100 நாட்களும், 5 சென்டர்களில் 175 நாட்களும் ஓடியது. சில தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது.
தமிழில் 'உதயம்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு 1990 பொங்கலுக்கு வெளியானது. அப்போது வெளியான ரஜினியின் 'பணக்காரன்', விஜயகாந்தின் 'புலன் விசாரணை' ஆகிய படங்களுடன் இப்படமும் போட்டி போட்டு ஓடி 175 நாட்கள் வரை ஓடி சாதனை புரிந்தது.
தெலுங்கில் வெளியாகி 35 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து படத்தின் நாயகன் நாகார்ஜுனா, “சாதனைப் படமான 'சிவா' வெளியாகி 35 வருடங்களாகிவிட்டது. அன்றைய தினம் எனது அப்பாவுடன் காரை ஓட்டிக் கொண்டு சென்றிருந்தேன். அப்போது அவர், “நேற்றிரவு சிவா படம் பார்த்தேன், இன்று காலை படம் பெரிய ஹிட் எனக் கேள்விப்பட்டேன். ஆனால், இப்படம் தெலுங்குத் திரையுலகத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறும் என நான் நம்புகிறேன்,” என்றார்.
அப்பா, உங்கள் வார்த்தைகள் எவ்வளவு நம்ப முடியாத உண்மை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சிவா மீதான அன்புக்கு நன்றி. குறிப்பாக இதை சாத்தியப்படுத்திய அனைத்து மக்களுக்கும் நன்றி, குறிப்பாக இயக்குனர் ராம்கோபால் வர்மா,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராம்கோபால் வர்மா, “எனது வாழ்நாளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி. உங்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் என் மீது முழுமையான நம்பிக்கை இல்லாமல், 'சிவா' இல்லை, நானும் இருந்திருக்க முடியாது,” என பதிலளித்துள்ளார்.