கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் |
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை எதிர்பாராத அளவில் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் என கலர்புல்லான நட்சத்திரங்கள் தமிழில் முதல் முறையாக இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் படங்களில் முதன்முறையாக அவருடன் சின்ன கதாபாத்திரத்தில் இணைந்து நடிப்பவர்கள் கூட பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். அந்த வகையில் மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்து சமது இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசரிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் வேட்டையன் படம் பற்றி கூறும்போது, “இந்த படத்திற்காக இயக்குனர் ஞானவேல் என்னை அணுகியபோது அவர் என்னிடம் இந்த கதாபாத்திரத்திற்காக பல மொழிகளில் இருந்தும் நடிகர்களை தேடினோம், போஜ்புரி மொழியில் கூட முயற்சித்தோம். அப்போதுதான் உங்களைப் பற்றி தெரியவந்தது. ஜல்லிக்கட்டு (மலையாளம்) படத்தில் உங்கள் நடிப்பை பார்த்து விட்டு இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் தான் சரியானவர் என முடிவு செய்தோம் என கூறினார். பிறகு அடுத்த வாரமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
படப்பிடிப்பின் முதல் நாள் அன்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு சாதாரண சிவப்பு நிற பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார். என்னை அவரிடம் இயக்குனர் அறிமுகப்படுத்திய போது உடனடியாக எழுந்து நின்று வணக்கம் சார் என்று கூறினார். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய நடிகர் என்னைப் போன்ற ஒரு சாதாரண நடிகருக்கு எழுந்து நின்று மரியாதை செய்ததை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டது. அதை அவரிடமே கூறவும் செய்தேன். உடனே என் தோள் மீது கை போட்டு என் படபடப்பை போக்கும் விதமாக பேசினார். அவருடன் நடித்த அந்த எட்டு நாட்களிலும் எனது நடிப்பை உற்சாகப்படுத்தி பலமுறை பாராட்டினார்
தமிழர்கள் அவரை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என நான் நினைத்தது உண்டு. ஆனால் நேரில் பார்த்ததும் தான் அவர் பெயரில் இருப்பது போன்ற காந்த சக்தி அவரிடம் இருப்பதை உணர முடிந்தது. அவருடன் எட்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டும் ஒரு புகைப்படம் கூட அவருடன் சேர்ந்து எடுக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இப்போதும் இருக்கிறது. அதேசமயம் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் என் மனதிற்குள் பத்திரமாக வைத்திருக்கிறேன். தமிழில் எனக்கு ஒரு அருமையான ஓப்பனிங் ஆக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.