சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பையனூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு அனிருத் இசையில் உருவாகியுள்ள ஒரு அதிரடியான குத்து பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் அதிரடி நடனமாடுகிறார்கள். இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இதற்கான செட் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே போடப்பட்டுள்ளது.
கமர்சியல் கதை என்றாலும் அரசியல் பின்னணி கதையில் உருவாகும் இந்த படத்தின் ஒரு பாடல் கட்சியில் தனது கட்சியின் கொடியுடன் தோன்றுகிறார் விஜய். அதோடு இந்த படத்தின் போஸ்டரிலும் ஜனநாயகத்தை காக்கும் வகையில் தீப்பந்தம் ஏந்தி போஸ் கொடுத்த விஜய், ஜனநாயக ரீதியிலான பல கருத்துக்களை முக்கிய காட்சிகளில் பேசுகிறார்.
குறிப்பாக இதுவரை ஆண்ட கட்சிகளை விமர்சிப்பதை விடுத்து, இனிவரும் காலங்களில் அரசியல் எப்படி இருக்க வேண்டும். இளைய தலைமுறை எப்படிப்பட்ட அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை சொல்லும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தமிழில் உருவாகும் இந்த விஜய் 69வது படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் டப் செய்து அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள்.