இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் சட்டம் என் கையில். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சதீஷ். அந்த வீடியோவில், கடந்த வாரம் வெளியான சட்டம் என் கையில் படம் ரசிகர்களின் வரவேற்போடு ஓடிக் கொண்டிருக்கிறது. பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளங்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த பாசிட்டிவான விமர்சனங்கள்தான் இந்த படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளது.
நல்ல விமர்சனங்கள் காரணமாக சட்டம் என் கையில் படத்திற்கு தற்போது கூடுதலாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இப்படத்தை பார்க்காதவர்கள் பாருங்கள். பார்த்தவர்கள் பிடித்திருந்தால் மீண்டும் சென்று பாருங்கள். ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நல்ல படங்களுக்கு எப்போதுமே மக்களின் ஆதரவு இருக்கிறது. இனிமேல் சட்டம் என் கையில் படம் உங்கள் கையில் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.




