'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி |

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தவர், விவாகரத்து கோரி கோர்ட் படியேறி உள்ளார். விவாகரத்து என்பது ஜெயம் ரவி தனிப்பட்டு எடுத்த விஷயம், என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறினார் ஆர்த்தி. இவர்களின் பிரிவை வைத்து தொடர்ச்சியாக பல்வேறு விதமான செய்திகள் உலா வருகின்றன. மேலும் பாடகி கெனிஷா உடன் ஜெயம் ரவி நெருக்கமானதும் இவர்கள் விவாகரத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் இதனை ஜெயம் ரவி மறுத்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி. அதில், ‛‛எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிரப்படும் கருத்துக்களை பார்த்து நான் அமைதியாக இருப்பது எனது பலவீனம் மற்றும் குற்ற உணர்வினால் அல்ல. உண்மையை மறைக்க என்னைப் பற்றி மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் நான் கன்னியமாக இருக்கிறேன். ஆனால் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புகிறேன்.
தெளிவாக சொல்வது என்றால் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவு தான். அவரின் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. இப்பவும் நான் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது வரை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது.
திருமண பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம். கடவுளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.