சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
சினிமாவில் பல கனவுகளுடன் வருபவர்கள் அதிகம். சிலருக்கு அந்த கனவுகள் உடனே நிறைவேறிவிடும், சிலருக்கு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும், சிலருக்கு நடந்தும் நிலைக்காமல் போய்விடும்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவிலிருந்து வந்த சுவாசிகா. அப்போது சில படங்களில் நடித்தார், ஆனாலும் அவருக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தற்போது 31 வயதில் அவர் நடித்த 'லப்பர் பந்து' படம் அவருக்குத் திருப்புமுனையாக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள படமாக அமைந்துள்ளது.
அது பற்றிய தன்னுடைய மகிழ்ச்சியை கண்ணீருடன் பேசி நேற்றைய நன்றி அறிவிப்பு சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். “பல கனவுகளுடன் வந்தேன், எதுவும் நடக்கவில்லை. பெட்டி, படுக்கையுடன் மன வருத்தத்துடன் அம்மாவுடன் திரும்ப கேரளாவுக்கே சென்றுவிட்டேன். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்நாட்ல வந்து ஒரு நல்ல படத்துல எனக்கு 'கம் பேக்' கிடைச்சது மகிழ்ச்சி. இங்க சென்னைல வீடு கட்டணும்னு ஆசைப்பட்டேன். இனிமே இங்க செட்டிலாகணும்னு கனவு மீண்டும் வருது. இந்தப் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் நான் நன்றாக நடிக்கிறேன் என ஒரு வார்த்தை கூட பாராட்டவேயில்லை, இப்பவாவது சொல்லுங்க, நீங்க சொல்வீங்கன்னு இன்னும் காத்திட்டிருக்கேன்” என்றும் வருத்தப்பட்டார்.
பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, “நீங்க நல்லாதான் நடிச்சீங்க சுவாசிகா. சொல்லக் கூடாதுன்னு இல்ல, நான் சொல்றத விடவும் இவங்க சொல்லணும். செட்டிலயே, என் மனைவி கூட 'என் தலைவி'தான்டா இந்தப் படம்னு சொன்னாங்க. தமிழ்ல ரீஎன்ட்ரி வேணும்னு கேட்டாங்க. கதை சொல்லி முடிச்சதும் ஓகே சொல்லிட்டாங்க. எந்த மொழில பண்ணாலும், எனக்கு தமிழ்ல ரீ-என்ட்ரி வேணும். தமிழ்ல பிரேக் கிடைக்கணும்னு கேட்டாங்க, அவங்க ஹேப்பினா, நானும் ஹேப்பிதான்,” எனப் பாராட்டினார். அவருடைய பாராட்டுப் பேச்சுக்கு மீண்டும் கண் கலங்கினார் ஸ்வாசிகா.