சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' படம் அடுத்த மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தை அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறார்கள். அங்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 9ம் தேதியன்றே படத்தின் பிரிமியிர் காட்சிகள் நடைபெற உள்ளது. பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அமெரிக்காவில் மிகப் பெரும் வரவேற்பு இருக்கும். அங்குள்ள பல நகரங்களில் உள்ள பல தியேட்டர்களில் அதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக ஆரம்பமாகி உள்ளது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படம் அங்கு பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை. இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த தமிழ்ப் படங்களின் வசூல் வறட்சியை 'வேட்டையன்' படம் முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.