இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
2024ம் ஆண்டின் 9வது மாதமான செப்டம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 27ம் தேதி “ஹிட்லர், மெய்யழகன், பேட்ட ராப், சட்டம் என் கையில்,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கார்த்தி நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ஜப்பான்' படம் படுதோல்வி அடைந்தது. அப்படத்திற்குப் பிறகு சுமார் 10 மாத இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள 'மெய்யழகன்' படம் வெளியாக உள்ளது. '96' பட புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ள இரண்டாவது படம். படத்தில் மற்றொரு கதாநாயகனாக அரவிந்த்சாமிக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை படத்தின் போஸ்டர்களில் கொடுத்துள்ளார்கள். தஞ்சாவூர் பின்னணியில் உருவாகியுள்ள கதை.
விஜய் ஆண்டனி நடித்து அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மழை பிடிக்காத மனிதன்' படமும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அவரது நடிப்பில் அடுத்து வர உள்ள படம் 'ஹிட்லர்'. தனா இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையமைப்பில், ரியா சுமன், கவுதம் மேனன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா தனி கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'பஹீரா'. ரசிகர்களை மிகவும் பதற வைத்த படமாக அமைந்தது. இந்த மாதத் துவக்கத்தில் வெளிவந்த 'தி கோட்' படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்தார். தற்போது அவர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'பேட்ட ராப்' படம் வெளியாக உள்ளது. எஸ்ஜே சினு இயக்கத்தில் வேதிகா, சன்னி லியோன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தனி கதாநாயகனாக அவர் தமிழில் வெற்றியைப் பார்த்துப் பல படங்கள் ஆகிவிட்டது.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சதீஷ். அவருடன் சக காமெடி நடிகர்களாக இருந்த யோகி பாபு, சூரி ஆகியோரும் கதாநாயகர்களாக உயர்ந்துவிட்டார்கள். சதீஷ் கதாநாயகனாக நடித்த 'நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். அதன் பின் அவர் நடித்து இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'வித்தைக்காரன்' படம் வந்த தடம் தெரியாமல் போய்விட்டது. அந்தக் குறையை 'சட்டம் என் கையில்' தீர்த்து வைக்குமா என்று பார்க்க வேண்டும்.
கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரபுதேவா, சதீஷ் ஆகிய நால்வருக்குமே அவரவர் படங்களின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அவர்களது முந்தைய படங்கள் தோல்விப் படங்களே.