ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாள திரையுலகில் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். 80 வயதான அவர் 60 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்துள்ளார். மலையாள திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் அம்மாவாக நடித்ததுடன் மலையாள சினிமாவில் அம்மா என்றால் கடந்த 50 வருடங்களில் இவரைத்தான் கைகாட்டும் அளவிற்கு பெருமை பெற்றவர். இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் இவரது மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் கவியூர் பொன்னம்மாவுடனான தனது நிறைவேறாத ஆசை ஒன்றையும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் அம்மாவாக பார்த்து வளர்ந்தது கவியூர் பொன்னம்மா சேச்சியை தான். அந்த அளவிற்கு அம்மா என்றால் அவர்தான். பிறகு அவருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு அவரது மகளாக நடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்லை என்பது மிகப்பெரிய வருத்தமாகவே இப்போது வரை இருக்கிறது. கண்ணெழுதி பொட்டும் வைத்து என்கிற படத்தில் அவருடைய தங்கையாக நான் நடித்து இருந்தேன். அதே சமயம் நான் அவரது மகளாக நடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மா மகளை போலவே வாழ்ந்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.