ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், தனா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம். இப்படத்தில் ரியா சுமன், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசையமைக்க, நவீன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 27ம் தேதி வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விஜய் ஆண்டனி பேசியதாவது: கவுதம் மேனன் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப்படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது. ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும். என்றார்.