ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
மலையாளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக டொவினோ தாமஸ் நடித்த அஜயண்டே ரெண்டாம் மோசனம், ஆசிப் அலியின் கிஷ்கிந்தா காண்டம், அங்கமாலி டைரிஸ் புகழ் ஆண்டனி வர்க்கீஸின் கொண்டல் என மூன்று பெரிய படங்கள் வெளியாகின. இதனுடன் ரகுமான் நடித்திருந்த பேட் பாய்ஸ் மற்றும் கேங்ஸ் ஆப் சுகுமார குறூப் என இன்னும் இரண்டு சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால் நடிகர் ஆசிப் அலி தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது படம் மற்றும் டொவினோ தாமஸ், ஆண்டனி வர்கீஸ் ஆகிய மூவரின் படங்களை மட்டும் ஒன்றிணைத்து ஒரு புரோமோ வீடியோவாக வெளியிட்டு இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதில் அவர் மற்ற இரண்டு படங்களின் ரிலீஸையும் இருட்டடிப்பு செய்து விட்டார் என பேட் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த நடிகை ஷீலு ஆபிரகாம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியதுடன், மலையாள திரை உலகில் இப்படித்தான் சிலர் குழுவாக ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்பட்டு சிறியவர்களை முடக்குகின்றனர் என்றும் கூறியிருந்தார். இவர் மட்டுமல்ல ஆசிப் அலியின் அந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ள ஆசிப் அலி, “இப்படிப்பட்ட படங்கள் வருகிறது, ரசிகர்கள் பார்த்து என்ஜாய் பண்ணி ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள் என்பதற்காக தான் அப்படி ஒரு புரோமாவை வெளியிட்டேன். மற்றபடிமற்ற இரண்டு படங்களையும் மறைக்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை. இதற்காக நான் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.