பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் | தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை |

மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் அதிக படங்களில் நடிப்பவர் மட்டுமல்லாது தயாரிப்பாளர்களின் மினிமம் கேரண்டி நடிகராகவும் விளங்குபவர் நடிகர் ஆசிப் அலி. அன்னயும் ரசூலும், கம்மட்டிபாடம் என விருது படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி தற்போது இயக்கியுள்ள 'குட்டாவும் சிக்ஷையும்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஆசிப் அலி. குறிப்பாக இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
“போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வேண்டும் என இந்த படத்தின் கதையை இயக்குனர் ராஜீவ் ரவி என்னிடம் கூறியதுமே எனக்கு முதன் முதலில் ஞாபகம் வந்தது காக்க காக்க சூர்யாவின் அன்புச்செல்வன் கதாபாத்திரம்தான். துடிப்பும் மிடுக்கும் கலந்த அந்த கதாபாத்திரத்திற்கு அவர் வெகு பொருத்தமாக இருந்தார். நான் பலமுறை பார்த்து ரசித்த அந்த கதாபாத்திரத்தையே இந்த படத்தில் நடிப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார் ஆசிப் அலி