சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாள நடிகையான சம்ரிதி தாரா 'மையல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி பேஸ் கேரளா 2019, மற்றும் ஸ்டார் மிஸ் பேஸ் ஆப் இந்தியா 2021, ஆகிய பட்டங்களை வென்றவர். பிரதி பூவன்கோழி, சுமேஷ் மற்றும் ரமேஷ் , கைபோல உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் பரன்னு பரன்னு பரன்னு, செல்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழுக்கு வருவது குறித்து அவர் கூறியதாவது: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழுக்கு வந்திருக்கிறேன். நான் நடிக்கும் 'மையல்' படம் தமிழில் எனக்கு நல்ல அறிமுகத்தையும், தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் என்றும் நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.




