'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
தீபா பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணா தயாரிப்பில், ஆல்வின் இயக்கத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்'. இதில் கதாநாயகனாக அறிமுக நடிகர் பார்கவ் நடிக்கிறார். கதாநாயகியாக விரானிகா நடிக்கிறார். இவர்களுடன் ரவிகாலே மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். விஜய் யார்ட்லி இசையமைக்கிறார். வீரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
படம் பற்றி இயக்குனர் ஆல்வின் கூறியதாவது : உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் காதல் ஆக்ஷன் ஜானர் திரைப்படமான இதில் தற்போதைய இளைஞர்கள் காதலுக்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராகி விடுகிறார்கள். காதலியின் இறப்பால் தடுமாறும் நாயகனின் வாழ்க்கை திசை மாற, திடீரென்று இறந்த காதலி உயிருடன் வருகிறார். அதன்பிறகு நாயகனின் திசை மாறிய வாழ்க்கை என்னவானது?, இறந்த காதலி எப்படி உயிருடன் வந்தார்? என்பதை நான் லீனர் முறையில் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதிரடி ஆக்ஷனோடு சொல்லியிருக்கிறோம்.
கதாநாயகனின் கதாபாத்திரம் அதிரடி மற்றும் ஆக்ரோஷம் மிக்கதாக இருப்பதோடு, அவரது கதாபாத்திர பெயர் சிவா, அதனால் படத்திற்கு 'ஓம் சிவம்' என்று தலைப்பு வைத்திருக்கிறோம். இந்த தலைப்பு அனைத்து மொழிக்கும் பொதுவானது என்பதால், அனைத்து மொழிகளிலும் இதே தலைப்பை வைத்திருக்கிறோம்.” என்றார்.