'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் பட 'வெனம் : தி லாஸ்ட் டான்ஸ்'. வெனம் படத்தொடரின் கடைசி பாகமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் ஹார்டி வெனோமாக மீண்டும் நடித்துள்ளார் . மார்வெலின் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனம் மற்றும் ஏடி இருவரின் உலகங்களிலும் நடக்கும் பல்வேறு விஷயங்களால் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். அதனை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தப் படத்தை, அக்டோபர் 25, அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது.