ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம். சபி தயாரிக்கும் படம் ராஜபுத்திரன். அப்பா மகனுக்கு இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. அப்பாவாக பிரபுவும், மகனாக '8 தோட்டாக்கள்' வெற்றியும் நடிக்கிறார்கள். கன்னட நடிகர் கோமல் குமார் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் மன்சூர் அலிகான், ஆர்.வி. உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
அறிமுக இசை அமைப்பாளர் நவ்பல் ராஜா இசை அமைக்க, ஆலிவர் டேனி ஒளிப்பதிவு செய்கிறார். வசந்த் சாய், மற்றும் நந்தா பெரியசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது "கிராமத்து தந்தையும் மகனும் என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் அவர்களுக்கு நடுவில் ஒரு மென்மையான அன்பு இருக்கும். ஆனால் அதன் வெளிப்பாடு பெரிதாக இருக்கும். அதனைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்" என்றார்.