இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
பாடலாசிரியராக, கதாசிரியராக, இயக்குநராக பின் தயாரிப்பாளராக உயர்ந்து, தமிழ் திரை ரசிகர்களின் உள்ளங்களில் தனி இடம் பிடித்தவர் 'இயக்குநர் திலகம்' கேஎஸ் கோபால கிருஷ்ணன். 1950 களில் “எதிர்பாராதது”, “அமரதீபம்”, “எங்க வீட்டு மகாலக்ஷ்மி”, “உத்தமபுத்திரன்”, “தெய்வப்பிறவி” போன்ற பல படங்களுக்கு பாடல்கள் எழுதி ஒரு பாடலாசிரியராக அறியப்பட்டு, அதன்பின் ஒரு கதாசிரியராக உயர்ந்து, 1962ஆம் ஆண்டு வெளிவந்த “சாரதா” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகமானார். இதில் எஸ்எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி நாயகன், நாயகியாக நடித்தனர்.
முதல் படமே முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட, முட்கள் நிறைந்த பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை தரும் படமாக அமைந்தது. “அம்பிகாபதி”, “திருடாதே”, “மணியோசை” போன்ற படங்களைத் தயாரித்த “ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஏஎல் சீனிவாசன் தயாரித்தார். இந்த திரைப்படத்தின் கதையை, அவர் அவரது நண்பர்களிடம் சொல்லியபோது, இது வேண்டாத விஷப்பரீட்சை என நண்பர்கள் சொல்ல, கதையை எழுதிய கேஎஸ் கோபாலகிருஷ்ணனையே இந்தப் படத்தை இயக்கச் சொல்லவும் இருக்கின்றேன் என ஏஎல் சீனிவாசன் ஆணித்தரமாக கூற, பைத்தியக்காரத்தனமான முடிவு என நண்பர்கள் கூறினர்.
துணிந்து அந்தக் கதையை படமாக எடுத்த ஏஎல் சீனிவாசன், படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில், அதுவரை எடுத்திருந்த படத்தை போட்டுப் பார்த்தபோது, இந்தப் படத்திற்காக முன் பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்கள், இந்தப் படம் சம்மந்தமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, கொடுத்த முன் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். இந்தநிலையில், படம் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, அதிகப்படியான வசூலை வாரிக் குவித்து, மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது ஏஎல் சீனிவாசனுக்கு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் குத்தகைக்கு எடுத்திருந்த 'மெஜஸ்டிக் ஸ்டூடியோ”வின் பெரையே “சாரதா ஸ்டூடியோ” என பெயர் மாற்றமும் செய்தார் ஏஎல் சீனிவாசன்.