கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இருந்தாலும் அவர் காப்பியடிக்கிறார் என்று அடிக்கடி ஒரு சர்ச்சை கிளம்பும். அவரது இசையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்து வரும் தெலுங்குப் படமான 'தேவரா' படத்தின் 'தாவூதி' படப் பாடல் போலவே அந்தப் பாடல் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே 'தேவரா' படத்தின் முதல் சிங்கிளான 'பியர்' பாடல் 'லியோ' படத்தின் 'படாஸ்' பாடலின் மறு உருவாக்கமாகவும், 'சுட்டாமலே' பாடல், சிங்கள ஆல்பமான 'மணிக்கே மஹே ஹித்தே' பாடலின் காப்பி என்றும் சர்ச்சை கிளம்பியது.
நேற்று வெளியான 'மனசிலாயோ' பாடல் கூட மலையாளப் படமான 'அஜகஜாந்தரம்' படத்தில் இடம் பெற்ற 'ஒல்லுல்லெரு' என்ற பாடலின் காப்பியாக உள்ளது என்று புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. இந்தப் பாடல் யு டியூப் தளத்தில் 128 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினி படத்திற்காக உருவான பாடலை ஜூனியர் என்டிஆர் படப் பாடலுக்காக அதே டியுனில், அதுவும் காப்பி டியூனில் போட்டது சரியா… என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.