ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ' தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பை சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் நடத்தினர். தற்போது வரை கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இப்போது சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா மற்றும் பலரின் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




