Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் 8வது 200 கோடி படம் ? வேறு யாரும் செய்யாத சாதனை…

08 செப், 2024 - 01:41 IST
எழுத்தின் அளவு:
Vijays-8th-200-crore-film-A-feat-that-no-one-else-has-done…


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'தி கோட்'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கான வசூல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் 200 கோடியை நிச்சயம் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துடன் சேர்த்தால் விஜய்யின் 8வது 200 கோடி படம் இது என்ற பெருமையைப் பெறுகிறது.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த, “மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ,” ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்தன. தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் கொடுத்தவர் என்ற பெயரைப் பெற்றிருந்த ரஜினிகாந்த் கூட இத்தனை 200 கோடி படங்களைக் கொடுத்ததில்லை. தற்போது பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள பிரபாஸ் கூட அதற்கும் குறைவான 200 கோடி படங்களையே கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல முதல் நாள் வசூலில் 100 கோடி வசூலைத் தந்த தமிழ் நடிகர்களில் விஜய் இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று லியோ, மற்றொன்று 'தி கோட்'. தமிழகம், வெளிநாடுகளில் தற்போது 'தி கோட்' படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை இன்று கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கலைநிகழ்ச்சி, பதவிக்காலம் நீட்டிப்பு, பாலியல் குற்றச்சாட்டுகள்: பரபரக்கும் நடிகர் சங்க கூட்டம்கலைநிகழ்ச்சி, பதவிக்காலம் ... ‛‛பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் சொல்லாதீர்கள்; சங்கத்தில் சொல்லுங்கள்'': நடிகை ரோகிணி வலியுறுத்தல் ‛‛பாலியல் புகார் குறித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

angbu ganesh - chennai,இந்தியா
10 செப், 2024 - 10:09 Report Abuse
angbu ganesh தயவு செஞ்சு ரஜினியோட இந்த விஜய கம்பேர் பண்ணாத அவர் மல இவன் மடு கூட இல்ல
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
10 செப், 2024 - 10:09 Report Abuse
angbu ganesh எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்குன்னு யோசிச்சு போடு, அந்த கோட் padam நல்ல இல்லன்னு ரிசல்ட் வந்தாச்சு அப்புறம் ஏன் அவனுக்கு போய் முட்டு கொடுக்கற
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in