ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சோசியல் மீடியாவில் குற்றச்சாட்டுகளாகவும் காவல்துறையில் புகார்களாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகர்கள் சித்திக், முகேஷ் மட்டுமல்லாது நடிகர் ஜெயசூர்யாவும் இதுபோன்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இவர்கள் மேல் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி மீதும் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதற்கு முன்பு மற்ற நடிகர்கள் மீது புகார் கூறியவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தற்போது குற்றம் சாத்தியுள்ளனர். ஆனால் நிவின் பாலி மீது குற்றம் சாட்டியுள்ள பெண் கடந்த 2023ல் தனக்கு வாய்ப்பு தருவதாக நிவின் பாலி கூறியதை நம்பி துபாய் வரை அவரை தேடி சென்றதாகவும் அங்கே உள்ள ஹோட்டலில் வைத்து அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நிவின்பாலி மட்டுமல்லாது இன்னும் ஐந்து பேர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து நடிகர் நிவின்பாலி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இது குறித்து போலீசார் என்னிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது என் தரப்பில் இருந்து நான் கூறிய விளக்கங்கள் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே இருந்தது. இந்த குற்றச்சாட்டு என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் அடைந்துள்ள வேதனை போலவே நானும் வேதனை அடைந்துள்ளேன். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க போராடித்தான் ஆக வேண்டும். என்னை நிரபராதி என நிரூபிக்க சட்ட ரீதியாக எந்த எல்லைக்கும் செல்வேன்” என்று கூறியுள்ளார்.