'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த வருடம் நடக்க வேண்டிய 8வது சீசனைத் தொகுத்து வழங்கப் போவதில்லை என அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவருக்குப் பதிலாக யார் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என அதன் பின் பல பெயர்கள் அடிபட்டது.
நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வந்துள்ளது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய வரையில் அந்த நிகழ்ச்சிக்கென ஒரு வரவேற்பு இருந்தது. அவருக்குப் பதிலாக வர உள்ளவர் அதே அளவு வரவேற்பைப் பெற்றால் மட்டுமே நிகழ்ச்சி ரசிகர்களிடம் சேரும். அது எப்படி இருக்கப்போகிறது என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்புதான் தெரியும்.
அதை ஈடுகட்ட சில பரபரப்பான போட்டியாளர்கள், சர்ச்சையான போட்டியாளர்களை பங்கேற்க வைத்து 'பிக் பாஸ்' குழுவினர் சமாளிக்கவும் வாய்ப்புள்ளது.
தெலுங்கில் 8வது சீசன் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் முதல் ஒளிபரப்பாகலாம்.