வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா | திரைக்கதை ஆசிரியரான நடிகை | இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா | நடிகைகள் பற்றி அவதூறு : யு-டியூப்பர் காந்தராஜ் மீது ரோகிணி புகார் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் நாளை (செப்-5) வெளியாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து அவர் மங்காத்தா படத்தை இயக்கியபோதே அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் கழித்து அந்த நிகழ்வும் தற்போது நடந்துள்ளது. எல்லாம் இயக்குனர்களையும் போல இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்து வருகிறது. அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி இந்த கோட் படத்தின் கதையைக்கூட அவர் ரஜினிக்காகத்தான் எழுதியுள்ளார்.
இதில் ரஜினியின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷும் நடிப்பதாகத்தான் கதையை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் சில காரணங்களால் அப்படியே இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம்.
கடந்த வருடங்களில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சில சங்கடமான சூழல் காரணமாக இந்த இருவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை புரிந்து கொண்டு தான் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருப்பார் என்றே தெரிகிறது. இந்த படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக வெளியான தகவலை மேலே சொன்ன தகவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் வெங்கட் பிரபு கூறியிருப்பது சரிதான் என தெரிய வரும்.