சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பாடகியுமான ஆண்ட்ரியா திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயிலான அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஆண்ட்ரியா நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டு அண்ணாமலையார் கோயிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமா விழாக்களிலும் மற்ற விழாக்களிலும் மாடர்ன் உடையில் கொஞ்சம் கிளாமராக வருபவர் ஆண்ட்ரியா. கிறிஸ்வது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து மதக் கோயிலுக்கு போகும் போது பாந்தமாகச் செல்ல வேண்டும் என சுடிதார் அணிந்து சென்று வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொருவது வெற்றிக்குப் பின்னும் தெய்வீகம் பின்னால் இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகையான சமந்தாவும் இந்து மதத்தில் பற்று கொண்டவர். வட இந்தியாவிலும் பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அதேப்போல மலையாள நடிகையான கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த நயன்தாராவும் தமிழக மருமகளாகி பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வழக்கம் கொண்டவர் என்பதும் அவர்களது ஆன்மீகப் பற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது.