மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மெய்யழகன்'. சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த மெய்யழகன் படத்தில் நடிகர் கமல்ஹாசன், யாரோ இவன் யாரோ, நான் போகிறேன் என்று தொடங்கும் இரண்டு பாடல்களை பின்னணி பாடியிருக்கிறார். இதற்காக கமலனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், மெய்யழகன் படத்தின் இரண்டு பாடல்களுக்காக தனது அருமையான குரலை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி. உங்களது மெல்லிய குரல் உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் அன்பு ஆதரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.