நாயகியான நாடக நடிகை திரிப்தி | பிளாஷ்பேக்: சிந்து பைரவிக்கு 40 வயது | பிளாஷ்பேக்: முதல் ஸ்டைல் வில்லன் சிவாஜி | 'மிராய்' நாயகன், இயக்குனருக்குக் கார் பரிசு | ஓடிடியிலிருந்து 'குட் பேட் அக்லி' நீக்கம் : யு-டியூபில் நீக்கப்படாத பாடல்கள் | பிளான் இருக்கு, ஆனா, எதுவும் முடிவாகல : கமல் படம் குறித்து ரஜினி கருத்து | 2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் |
விஜய் நடித்திருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரப்போகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், நான்காவது பாடல் இன்று(ஆக., 31) வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல்களை விஜய் பாடியுள்ள நிலையில், ஒரு பாடலை மறைந்த பாடகி பவதாரணி உடன் இணைந்து பாடியிருந்தார். பவதாரணிக்காக ஏஐ தொழில் நுட்பம் பயன்படுத்தபட்டது. மேலும், முதல் மூன்று பாடல்களும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், இன்று வெளியாகும் நான்காவது பாடலாவது ஹிட் அடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இந்த கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் கதையை விஜய் இடத்தில் சொன்ன போது இசை அமைப்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை. பின்னர் விஜய்தான், வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சிறப்பாக இருக்குமே என்று சொல்லி யுவன் சங்கரை இசையமைப்பாளராக புக் பண்ணுமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்.