இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

2017 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு தொடங்கும் பிக்பாஸ் எட்டாவது சீசனில் இருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். அதையடுத்து கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் யூகத்தின் அடிப்படையில் பல நடிகர் நடிகைகளின் பெயர்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்- 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ நேற்று புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். விரைவில் இந்த புரொமோ வீடியோ வெளியாக இருக்கிறது.