ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி | அப்பா- அம்மாவின் பிடிவாதம் ஏற்படுத்திய பாதிப்பு! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்! | கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது! | அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன் | துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர் | தமிழில் அடுத்த 'உண்மையான பான் இந்தியா' எப்போது? | மாதுரி தீட்சித் உடன் நடனமாடியது பெருமை - வித்யாபாலன் | 'கங்குவா' போல சில கதைகள் உள்ளன: இயக்குனர் சிவா ஆர்வம் | சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் | ''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி |
திருப்பூர் : ஜாதியின் பெயரால் படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கும் சினிமா துறையினர் தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. அதன் பெயரால் தங்கள் வாழ்வை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர், என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
ஜாதியை முன்னிறுத்தி படங்கள்
திருப்பூர் 'சக்தி' பிலிம்ஸ் சுப்ரமணியம் கூறியதாவது: தற்போது சினிமாவில் ஜாதியை முன்னிறுத்தி படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. சில ஆண்டு முன்னர் ஜாதி பெயர்களுடன் சினிமாக்கள் வந்தன. ஆனால் அவற்றில் பிற ஜாதிகள் குறித்து பேசாமல், கதைக்கு அவசியமானது குறித்து மட்டுமே இடம் பெற்றது. இன்று வெகுஜன மீடியாவான சினிமாவில், சிலர் குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே விளிம்பு நிலை மக்கள் என்ற ரீதியில், ஏதோ ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்த சம்பவத்தை பெரிது படுத்தியும், பிற ஜாதியை கொடூரமாகவும் சித்தரிக்கின்றனர்.
சொகுசு வாழ்க்கை
எல்லா ஜாதியிலும் விளிம்பு நிலை, வறுமை நிலை மக்கள் உள்ளனர். ஜாதியை வைத்து படம் எடுத்து அதில் சம்பாதித்த யாரும் அவர்கள் குறிப்பிடும் அந்த விளிம்பு நிலை மக்களுக்கு எந்த உதவியோ, அவர்கள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கையோ எடுக்கவில்லை. தங்கள் வாழ்க்கைத் தரத்தை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர். சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வசதியான வாழ்க்கை வாழ்வதை தவறு என்று சொல்லவில்லை. விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் குறித்து நேர்மறை எண்ணங்களை தரும் வகையில் படம் எடுக்க வேண்டும்.
நிச்சயம் பிளாப் ஆகும்
முதல் பாதிவரை நல்ல கதைக் கருவை கொண்டு சென்று விட்டு, இரண்டாம் பாதியில் ஜாதியை புகுத்துவது தவறு. இதை எந்த ரசிகரும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தான் இது போன்ற படங்கள் சில காட்சிகள் மட்டுமே நல்ல ரிசல்டை தருவதோடு, இரண்டாவது நாளிலேயே பிளாப் ஆகி விடுகிறது. எதிர்காலத்தில் இது போல் வரும் படங்கள் நிச்சயம் படுதோல்வியை மட்டுமே சந்திக்கும்.
சினிமாவுக்கு ஜாதி தேவையில்லை
மூன்று மணி நேரம் சினிமா பார்க்க வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படம் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு ஜாதியினரை மற்றொரு ஜாதியினர் கொடுமைப்படுத்தியதாக சித்தரித்து, ஜாதி வெறியை துாண்டி, இரு பிரிவிடையே தேவையற்ற பகைமையை உருவாக்குகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியமான சினிமா துறைக்கு இது அவசியமில்லை.
இமேஜை சிதைக்கும் கலைஞர்கள்
இன்றைய நிலையில் ஜாதி பேதம் எங்கும் இல்லை. எந்த ஜாதியும் அந்தஸ்து தருவதில்லை. ஒருவரின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியன தான் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. யாரையும் துன்புறுத்தாமல், ஏமாற்றாமல் வாழ்வில் முன்னேற வேண்டும். எந்த கலைஞனையும் எந்த ரசிகனும் ஜாதி கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. சிலர் தங்கள் படைப்புகளில் தாங்களாகவே அதை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். திறமையான கலைஞர்கள் கூட இது போல் சினிமா எடுத்து தங்கள் இமேஜை சிதைத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.