'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
திரையுலகில் கடந்த பல வருடங்களாகவே நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள், சமமான சம்பளம் மறுப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது. நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். அதைத் தொடர்ந்து கேரள அரசு இதில் தலையிட்டு நீதிபதி ஹேமா தலைமையில் இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்தது,
சமீபத்தில் வெளியான அந்த ஹேமா கமிஷன் அறிக்கை இதுவரை சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உறுதி செய்தது, அதிலும் குறிப்பாக மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள், நடிகைகள் கொண்டு செல்லும் புகாரை கண்டு கொள்வதில்லை என்றும், அதில் நிர்வாகிகள் ஆக இருக்கும் சில நடிகர்களே இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள் என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மோகன்லால் தலைவராக உள்ள மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்தனர். சிலர் இந்த ராஜினாமாவை வரவேற்றாலும் பலரும் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகை பார்வதி இப்படி நடிகர் சங்கத்தை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “ஹேமா கமிஷன் அறிக்கை எங்களது சினிமா பெண்கள் நல அமைப்பு கடந்த சில வருடங்களாக முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதேசமயம் இந்த அளவிற்கு நிலைமை சீரியஸாக செல்லும் அளவிற்கு வளர்த்து விட்ட மலையாள நடிகர் சங்கத்தினர், பிரச்சனை என்று வரும்போது அதுகுறித்து அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்னெடுக்காமல் இப்போது வெளியாகும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் விதமாக இப்படி ராஜினாமா செய்தது கோழைத்தனம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மறைக்கப்பட்டு இவர்கள் ராஜினாமா செய்தது மட்டுமே பெரிதாக பேசப்படுகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.