2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
மலையாள திரையுலகம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பு செய்திகளில் அடிபட்டு வருகிறது. குறிப்பாக நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் பெண்கள் வாய்ப்புகளுக்காக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்படுகிறார்கள் என்கிற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியதிலிருந்து பல பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் இதுபோன்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி அவர்கள் தாங்கள் பொறுப்பு வகித்த சங்கங்களின் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை சீரியஸாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகை மினு முனீர் என்பவர் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மற்றும் குணச்சித்ர நடிகர்களான மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் சங்கத்தில் துணைப்பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த 2008ல் மலையாளத்தில் 'தே இங்கோட்டு நோக்கியே' என்கிற படத்தில் நடித்தபோது அதன் கதாநாயகன் ஜெயசூர்யா தன்னை தனியான ஒரு பிளாட்டிற்கு வருமாறு அழைத்ததாகவும் தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதேபோல நடிகர் முகேஷ் இரட்டை அர்த்த தொணிக்கும் வார்த்தைகளில் பேசி தன்னிடம் எல்லை மீற முயன்றதாகவும் கூறியுள்ளார் மினு முனீர்.
மேலும் டா தடியா என்கிற படத்தில் நடித்தபோது குணச்சித்திர நடிகர் மணியம்பிள்ளை ராஜு தான் தங்கி உள்ள ஹோட்டல் அறைக்கு வர விரும்புவதாக கூறியதாகவும் ஆனால் அதை மறுத்ததற்காக தன்னிடம் படப்பிடிப்பில் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகிய' இடவேள பாபு, நடிகர் சங்கத்தில் உறுப்பினராக தன்னை சேர்ப்பதற்காக தன்னிடம் தவறான அணுகு முறையில் முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். இப்படி பல நடிகர்கள் மீது அடுக்கடுக்காக, சில நடிகைகள் சிலர் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருவது மலையாள திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.