ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
'கே.ஜி.எப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பஸ்ரூர், ஒரு இயக்குனரும் ஆவார். இதுவரை 5 படங்களை இயக்கி உள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது இயக்கும் கன்னட படம் 'வீர சந்திரஹாசா'.
கர்நாடக மாநிலத்தில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வரும் வீர சந்திரஹாசாவின் கதையை திரைப்படமாக்குகிறார். கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்று உழைத்து வருகிறார்.
இதுகுறித்து ரவி பஸ்ரூர் கூறும்போது “கர்நாடகாவின் பாரம்பரியமான யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி இது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல... கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழி பெயர்க்கும் திறனும் தேவையாக இருந்தது. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.
புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக 'வீர சந்திரஹாசா உருவாகி உள்ளது. என்றார்.