மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா |

'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளவர் மலையாள நடிகை நித்யா மேனன். தற்போது பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும், நித்யா மேனனும் ஏற்கெனவே மலையாள படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 1950கள் முதல் எம்ஜிஆர் துவங்கி தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது.
கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.