''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் இன்று(ஆக., 22) அக்கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்து அவரது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன், அம்மா ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. விஜய்யும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று வெளிவரும் தகவல்களை அவை உறுதி செய்வதாகவே உள்ளன.
கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்ற போது அவருடைய அம்மா விஜய்யின் கையைப் பிடித்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அதை கண்டு கொள்ளாமல், அம்மாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விஜய் நகரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பரவியது.
தன்னுடைய அம்மாவை விஜய் மதிக்காமல் செல்வது சரியா என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேடையில் பேசும் போது மட்டும் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்லியிருந்தார் விஜய்.
விஜய் தீவிர அரசியலில் இறங்கும் போது அவரது குடும்பத்தினரைப் பற்றியப் பேச்சுக்களும் அவருக்கு எதிராகத் திரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.