கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி |
கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாகும் வழக்கம் தற்போது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே எம். எஸ்.தோனி, சச்சின் ஆகிய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த வரிசையில் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தலைப்பு குறித்த மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். 2011ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றதற்கு யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டமும் காரணம்.
இப்போது பாலிவுட்டில் டி சீரியஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இந்த நிகழ்வில் பேசிய யுவராஜ் சிங் கூறுகையில், " பூஷண் மற்றும் ரவி ஆகிய இரண்டு தயாரிப்பாளர்கள் மூலம் உலகளவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு என் கதையை வெளிப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என் வாழ்வின் எல்லா உயர்வு தாழ்விலும் கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய பலமாகவும், நான் நேசிக்கும் ஒன்றாகவும் இருந்துள்ளது. மற்றவர்கள் தங்கள் போராட்டங்களை சமாளித்து மீண்டு எழவும், அசைக்க முடியாத கனவுகளை ஆர்வத்துடன் பின்தொடரவும் இந்தப் படம் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.