விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா | ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து கடந்த சில வாரங்களாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்தனர்.
இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி அன்று வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.