மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் |
தற்போது லோக்சபா உறுப்பினராகவும் ஆகிவிட்ட நடிகை கங்கனா ரணாவத் தனது தடாலடி பேச்சுகளை இன்னும் விடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 'எமர்ஜன்சி' பட விழாவில் பேசிய கங்கனா ‛‛ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் மூவரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசையாக உள்ளது. மூவரும் திறமையாளர்கள் மட்டுட்டுமல்ல, ஹிந்தி சினிமாவுக்கு அவர்களால் அதிக வருமானமும் கிடைக்கின்றன. அவர்களால் சமூகத்தில் சில மாற்றங்களை உண்டாக்க முடியும்'' என்றார்.
இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் “பாலிவுட்டில் எனக்கு நண்பர்களே கிடையாது. அங்கிருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது “எனது திரையுலகப் பயணத்தில், பாலிவுட்டிலேயே அதிக நேரத்தைச் செலவழித்துவிட்டேன். இங்கு இருப்பவர்கள் யார்? அவர்கள் என்னிடம் எப்படிப் பழகுவார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் நான் பாலிவுட்டில் நடக்கும் எந்தவொரு பார்ட்டிக்கும் செல்வது இல்லை. எந்த நடிகருடனும் நெருங்கிப் பழகுவதும் இல்லை. உண்மையைச் சொல்வது என்றால், பாலிவுட்டில் எனக்கு நண்பர்களே கிடையாது. தொழில் ரீதியாக நடக்கும் விருந்துகளிலும் நான் கலந்துகொள்வது இல்லை.
என்னைப் பொறுத்தவரையில், நான் பாலிவுட் ஆள் கிடையாது. அங்குள்ள அனைவரும் முட்டாள்கள். அவர்களுக்கு மூளையே கிடையாது. சினிமா பார்ட்டியில் பிராண்டட் வாட்சுகள், பைகள், விலையுயர்ந்த கார்கள், ஒருவருக்கொருவர் டேட்டிங் அல்லது உறவைப் பற்றியே பேசுகிறார்கள் அல்லது ஒருவருக்கொருவர் உடற்தகுதி பற்றியே பேசுகிறார்கள். வேறெந்த விஷயத்தைப் பற்றியும் அவர்கள் பேசவே மாட்டார்கள். பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் சம்பவங்களை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில், அதுபோன்ற பார்ட்டிகளுக்கு நான் எப்போதுமே செல்ல மாட்டேன். பாலிவுட் நபர்களுடன் என்னால் நட்புகொள்ள முடியாது. இதை உறுதியாகவே சொல்வேன்” என்கிறார் கங்கனா.